சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 2-வது தெருவில் எலக்ட்ரீசியனான கிரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிரண் குமார் பட்டதாரியான மணிமேகலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான மணிமேகலை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக மணிமேகலையின் தாய் இந்துமதி தனது மகளை வரதட்சனை கேட்டு கிரண் குமார் அடித்து துன்புறுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மணிமேகலையை கிரண் குமார் கொடுமைப்படுத்தியது உறுதியானது. இதனால் போலீசார் கிரண் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.