பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் என்பவருக்கு 9 மனைவிகள் மற்றும் ஒரு மகளும் உள்ளார். இவர் தன்னுடைய வாழ்க்கை பற்றி கூறும் போது இவருடைய லட்சியம் தனக்கு 10 மனைவிகளும் ஒவ்வொரு மனைவிக்கும் தலா ஒரு குழந்தையும் இருக்க வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு மனைவியின் மீதும் நான் எந்த அளவில் அன்பு கொண்டிருக்கிறேன் என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை எனவும் அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் போது அது யாருடையது விலை உயர்ந்தது என்பது பற்றித்தான் பொறாமை ஏற்படுகிறது எனவும் ஆர்தர் கூறியுள்ளார்.
அதோடு நேர பட்டியல் போட்டு ஒவ்வொரு மனைவியுடனும் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். அவ்வாறு ஈடுபடும் பட்சத்தில் பாலியல் இன்பத்திற்காக அல்லாமல் நேரப் பட்டியலில் உள்ளது என்பதற்காக தாம்பத்தியம் கொண்ட நாட்களும் உண்டு என அவர் கூறியுள்ளார். எங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், கேளிக்கையும் அதிகமாகவே உண்டு அதோடு நாங்கள் தனித்துவமானவர்கள் எனக் கூறியுள்ளார். இதில் அகத்தா என்ற ஒரு மனைவி மட்டும் ஆர்தரை விட்டு பிரிய முடிவு செய்துள்ளாராம். அவர் ஆர்தர் தனக்கு மட்டுமே வேண்டுமென எண்ணியுள்ளார். இதுகுறித்து ஆர்தர் கூறுகையில் அகத்தாவின் எண்ணம் தவறானது என கூறியுள்ளார்.