9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வெள்ளி பட்டறை தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி விவேகானந்தர் தெரு பாரதியார் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருடைய மகன் வெள்ளி பட்டறை தொழிலாளியான நவீன்(22) என்பவர் ஆட்டையாம்பட்டி பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மணியனூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் வைத்து பார்த்தார். அதன்பின் இருவரும் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் நவீன் அந்த மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அந்த மாணவியை கடத்திச் சென்று தனது நண்பர் வீட்டில் தங்க வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கொட்டாம்பட்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நவீனை கைது செய்துள்ளனர். மேலும் அந்த மாணவியை மீட்டு காவல்துறையினர் சிறார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.