Categories
தேசிய செய்திகள்

“9 ஆண்டுகளில் 5 முறை ஏமாற்றம்”….. இனியும் அனுமதிக்க முடியாது….. தமிழக அரசு திட்டவட்டம்….!!!!

காவேரி விவகாரத்தில் தமிழ்நாட்டில் உரிய நீரை திறந்து விடாமல் கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து முறை கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழ்நாடு அரசு சார்பில் விரிவான பதில் மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பை வழங்கிய போது மேகதாது அணை அமைப்பது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எந்த ஒரு உரிமையும் வழங்கவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிடுவது சட்டத்திற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் முரணானது என அந்த மனுவில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் தென்மேற்கு பருவமழையின் போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு ஏமாற்றியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கக்கூடிய தனது அதிகார வரம்பிற்குள் மட்டும் தான் செயல்பட முடியும். மேகதாது அணை திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது” என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |