கியாரா அத்வானி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.
நடிகை கியாரா அத்வானி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பிறகு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ஹிந்தி ரீமிக்கில் மேலும் பிரபலமானார். தற்போது சங்கர் ராம் சரண் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.
இவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு அதன் தலைப்பில் நீண்ட நாட்களுக்கு ரகசியங்களை வைத்திருக்க முடியவில்லை. டிசம்பர் இரண்டாம் தேதி வரை காத்திருங்கள் என பதிவிட்டிருக்கின்றார். இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த பதிவுக்கு கல்யாண அறிவிப்பா? என கேட்கின்றார்கள். சிலரோ சித்தார்த் மல்லோத்ராவுடன் திருமணமா எனவும் கேட்கின்றார்கள். ஆகையால் புதிய பட அறிவிப்பா? திருமணம் குறித்த அறிவிப்பா? என ரசிகர்கள் பொறுத்து இருக்க வேண்டும் குறிப்பிடத்தக்கது.