மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் ஒலிக்கருவி திட்டத்தை எம்எல்ஏ உதயநிதி தொடங்கி வைத்தார்.
சென்னையில் மாநகர் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலமாக பேருந்து நிறுத்தம் குறித்து ஒலி அறிவிப்புத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள பல்லவன் சாலை பணிமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார்.
மேலும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றார்கள். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஒரு மாநகரப் பேருந்தில் ஏறி மக்களுடன் பயணம் மேற்கொண்டார். அவர் பல்லவன் சாலை பணிமனையில் இருந்து பிராட்வே வரை பேருந்தில் பயணித்தார். அவருடன் அமைச்சர்களும் சென்றார்கள். பேருந்து பயணித்தின்போது ஒலிபெருக்கிகள் சரியாக வேலை செய்கின்றதா? பேருந்து நிறுத்துங்களின் விவரத்தை சரியாக கூறுகின்றதா? என ஆய்வு மேற்கொண்டார்.