இந்தியன் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.
இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றார்கள். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார்.
தற்போது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முடிவடைந்ததையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தயாராகி வருவதாக செய்தி வெளியாக இருக்கின்றது. கமல்ஹாசனும் தற்போது உடல் நலம் தேறியுள்ள நிலையில் படபிடிப்பிற்கு தயாராகி வருகின்றார்.