சண்டை காட்சியில் நடித்த அருண் விஜய்க்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க முதல் கட்ட படப்பிடிப்பு சென்ற செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கப்பட்டது.
இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டு இருக்கின்றது. அந்த புகைப்படத்தை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். அருண் விஜய் சண்டைக் காட்சிகளில் எத்தனை முறை காயப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் டூப்போடாமல் அவரே நடித்து வருகின்றார். சண்டைக்காட்சியில் உண்மையாக நான் நடிப்பதையே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.