Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலைக்கிட்ட மாட்டிகிட்டா.. வேட்டியதான் ஏத்திக்கிட்டு…” கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி பாடல்..!!!

கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.

அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இந்த பாடலில் இடம் பெற்றுள்ள சேலை கிட்ட மாட்டிகிட்டா, வேட்டியதான் ஏத்திகட்டு என்ற வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |