குரங்குகள் மற்றும் அணில்களிடமிருந்து தேங்காய் மற்றும் இளநீரை பாதுகாப்பதற்காக விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்து உள்ளார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்றது மழை காரணமாக குளங்கள் தன்மைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. உடவன் பட்டி கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றார்கள் தற்போது இந்த தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான இளநீர் மற்றும் தேங்காய்கள் இருக்கின்றது.
இந்த நிலையில் பிரான்மலை காட்டுப்பகுதியில் இருக்கும் குரங்குகள் மற்றும் அணில்கள் இங்கிருக்கும் தென்னை மரத்திற்கு வந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் இளநீர் மற்றும் தேங்காய்களை சேதப்படுத்திவிட்டு சென்று விடுகின்றது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் தென்னை மற்றும இளநீரை பாதுகாப்பதற்காக ஒவ்வொரு தென்னை மரத்திலும் பாம்பு நெளிவது போல் பெயிண்ட் மூலம் ஓவியம் வரைந்து வைத்துள்ளனர். இதனை பார்க்கும் குரங்கு மற்றும் அணில்கள் பாம்பு நெளிந்து மேலே ஏறுவது போல் இருப்பதால் நிஜ பாம்பு என நினைத்து பயந்து போய் மரத்தில் ஏறாமல் அங்கிருந்து சென்று விடுவதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகின்றது.