உடல் நலம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்காக கமல் தெரிவித்துள்ளதாவது, முன்பு பெரிய விபத்து எல்லாம் நேர்ந்த போது கூட அடுத்த படத்தின் ஷூட்டிங் எப்போது என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது சின்ன இருமல் என்றால் கூட என்னை பற்றி பெரிய செய்திகள் எல்லாம் வருகின்றது. அதற்கு காரணம் ஒன்று ஊடகம், மற்றொன்று பெருகிவரும் அன்பு என்று நான் நினைக்கின்றேன். நான் நன்றாக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.