Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்: அமித்ஷா திட்டவட்டம்…!!!!

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது என கூறியுள்ள அமித்ஷா ஜனநாயக ரீதியிலான ஆலோசனை முடிந்த பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய அரசியலமைப்பு சாசனம் பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கும் நிலையில் மதசார்பற்ற நாடான இந்தியாவில் மத ரீதியான சட்டங்கள் இருக்கக் கூடாது எனவும் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் இயற்றப்படும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பதால் ஜனநாயக ரீதியில் ஆக்கபூர்வமான விவாதம் ஆலோசனைகளை நடத்த வேண்டிய அவசியம் இருந்துள்ளதாகவும் விவாதம் ஆலோசனை நிறைவு பெற்ற பிறகு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என அமைச்சர் உறுதி பட தெரிவித்தார். பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கடந்து இந்தியா உயர்ந்த நிலையை எட்டியுள்ள நிலையை சுட்டி காட்டிய அமித்ஷா, இப்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் இது பின்னோக்கி பார்ப்பதற்கான நேரம் கிடையாது எனவும் முன்னோக்கி பார்த்து வளர்ச்சி பாதையில் அதிவேகமாக முன்னேறி செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த 25 ஆண்டுகளில் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளதாகவும் அப்போது உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசின் 8 ஆண்டுகள் ஆட்சியில் ஊழல் அறவே ஒழிக்கப்பட்டு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |