அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போராட்டம் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலத்தை பயன்படுத்தி நசுக்குவோம் என அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் எனவும் ரணில் விக்ரம் சிங்கே உறுதி அளித்துள்ளார்.
இந்த நாட்டில் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது எனவும் தேர்தல்களால் மக்களும் அரசியல் கட்சிகளும் சோர்ந்து போய் உள்ளதாகவும் கூறினார்.