Categories
சினிமா தமிழ் சினிமா

சம்மு குறித்து தீயாய் பரவிய வதந்தி… சமந்தா தரப்பு முற்றுப்புள்ளி…!!!

சமந்தாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக பரவிய தகவல்கள் வதந்தி என அவரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.

இதுபற்றி அவர் செய்தி தொடர்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் வீட்டிலிருந்து தான் சிகிச்சை எடுத்து வருகின்றார். இப்படி இருக்கும் வகையில் இப்படி தவறான செய்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை. சமத்தா சென்ற மூன்று வாரங்களாக வழக்கமான பரிசோதனைக்காக கூட மருத்துவமனைக்கு சொல்லவில்லை என்பதே உண்மை என கூறியுள்ளார்.

Categories

Tech |