நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
நெட் பேங்கிங் அக்கவுண்ட் முடியப்போவதாக வங்கிகளின் பெயரில் வரும் போலி மெசேஜ்களுக்கு எந்த விவரங்களையும் அளிக்க வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார். இது குறித்த புகார்களுக்கு 1930 என்கின்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வங்கியிலிருந்து போலியாக வரும் மெசேஜில் இருக்கும் லிங்கில் உங்கள் தகவலை உள்ளிட்ட சொல்லி கூறுவார்கள்.
இதன் பின் ஓடிபி எண்ணை சொல்லுமாறு கூறுவார்கள். நீங்கள் ஓடிபி என்னை தெரிவித்த பிறகு உங்கள் வங்கியில் இருக்கும் மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள். இது மாதிரியான மோசடி பல வருடத்திற்கு முன்பு இருந்தது சரிதான். தற்போது அது மீண்டும் வந்திருக்கின்றது. இது மாதிரி எந்த வங்கியில் இருந்தும் உங்களின் நெட் பேங்கிங் முடிய போகிறது என வரும் மெசேஜ்களை நம்ப வேண்டாம். உங்கள் ஆதார், பான் எண்களை உள்ளிட கூறி எந்த வங்கியும் சொல்ல மாட்டார்கள். அவ்வாறு சொன்னால் அது போலி ஆகும். ஆகையால் விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.