நடிகர் விமல் குறித்து இயக்குனர் லிங்குசாமி பேசியுள்ளார்.
பசங்க, களவாணி, மஞ்சள் பை, கேடு பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான விமல் தற்போது துடிக்கும் கரங்கள் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை கொடியன் டாக்கீஸ் தயாரிக்க வேலுதாஸ் இயக்குகின்றார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் சென்னையில் டீசர் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் திரை பிரபலங்கள், படக்குழுவினர் என பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியுள்ளதாவது, ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தின் டைட்டிலை படத்திற்கு வைத்திருக்கின்றார்கள். அவரது திரைப்படங்களில் கொஞ்சம் சுமாராக ஓடிய திரைப்படங்களின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் அது சென்டிமீட்டாக மிகப்பெரிய வெற்றி பெறுகின்றது. அதற்கு நான் மகான் அல்ல திரைப்படம் உதாரணமாகும்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சள் பை உள்ளிட்ட நல்ல திரைப்படங்களில் விமல் நடித்திருக்கின்றார். சிவகார்த்திகேயன் மாதிரி இந்நேரம் சென்று இருக்க வேண்டிய விமல் இடையில் சில தவறுகள் செய்ததால் கொஞ்சம் தடைபட்டுள்ளது. தற்போது சின்ன படங்கள் என்று சொல்லக்கூடிய லவ் டுடே திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று பெரிய திரைப்படமாக மாறி இருக்கின்றது. இப்படத்தின் டீசரை பார்த்ததில் எதுவும் தப்பாக இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.