சூர்யகுமார் விளையாடியது குறித்து நியூசிலாந்து கேப்டன் பேசி உள்ளார்.
நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 111 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலக தரம் வாய்ந்தது எனவும் தனது வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று எனவும் சூர்யகுமார் ஆடிய சில ஷாட்டுகளை என் வாழ்க்கையில் இதுவரை பார்த்ததே இல்லை, அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருந்தது எனவும் தெரிவித்தார்.