அக்டோபரில் இந்திய ஏற்றுமதி சரிந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை 2691 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் ஏற்றுமதி சென்ற அக்டோபர் மாதத்தில் 17 விழுக்காடு சரிந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி முக்கிய ஏற்றுமதி துறைகளான ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி ரசாயன பொருட்கள், மருந்து பொருட்கள், கடல்சார் பொருட்கள், தோல் பொருட்கள் ஆகியவை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி சரிவை சந்தித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் குறைந்துள்ளது.