Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்… ”ஸ்மார்ட்போன்” சந்தை.. 3 ஆண்டுகள் வரலாறு காணாத சரிவு..!!!

ஸ்மார்ட் போன் சந்தை 3 வருடங்களில் காணாத அளவில் சரிந்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தை ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சென்ற மூன்று வருடத்தில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை 10 விழுக்காடு குறைந்து 4.3 கோடியாக இருக்கின்றது.

இது சென்ற மூன்று வருடங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். மேலும் செல்போன்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் 2023 ஆம் வருடத்தில் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை பாதிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

Categories

Tech |