மாரி செல்வராஜ் தனது அடுத்த திரைப்படம் குறித்த தகவலுக்காக போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இத்திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரமை வைத்து இயக்கப் போவதாக செய்தி வெளியான நிலையில் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் நடுவில் நான்கு சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்று இருக்கின்றது. மேலும் அதில் நாளை காலை மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்திருக்கின்றார்.
