Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கதைகளத்தில் “கலகத் தலைவன்”… திரையரங்கில் மாஸ் காட்டும் உதயநிதி…!!!

கலகத் தலைவன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் நடித்திருக்கின்றார்கள். இப்படம் நவம்பர் 18-ம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகின்றது. இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தின் கதைகளத்தையும் திரைக்கதையையும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்டோரின் நடிப்பை பாராட்டி வருகின்றார்கள்.

Categories

Tech |