இன்று விஜய் தனது ரசிகர்களையும் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் பனையூரில் சந்தித்து பேசுகின்றார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென ஆந்திராவில் படம் பொங்கலன்று வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது.
சென்ற ஐந்து வருடங்களாக விஜய் ரசிகர்களை சந்திப்பது கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில் பல கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்ததைத்தொடர்ந்து இன்று விஜய் ரசிகர்களை சந்திப்பதற்காக பனையூர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது ரசிகர்கள் அவரை கர கோஷம் எழுப்பி புன்னகையுடன் வரவேற்றார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் மன்ற நிர்வாகிகள் சிலருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
மேலும் வாரிசு பட ரிலீஸின்போது ரசிகர்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலாகவும் இருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த நிலையில் தெலுங்கில் படம் ரிலீஸ் ஆக வேண்டிய சூழலில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் படி நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு விழா நாட்களில் அதிக முன்னுரிமை தர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதன் காரணமாக பட வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாகும் போது ரசிகர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய வழிகாட்டுதல்களும் நெறிமுறைகளும் இந்த கூட்டத்தில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என சொல்லப்படுகின்றது.