நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார்.
மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடுகின்றார். இந்த பாடல் படப்பிடிப்பு சென்ற சில நாட்களாக நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.