மலையாள இயக்குனர் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார்.
மலையாள சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகின்றார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் இப்படிப்பட்ட திரைப்படங்களை தான் இயக்குனர் என தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்துக் கொள்ளாமல் பலவிதமான ஜானர்களில் படங்களை இயக்கி வருகின்றார். இவர் தமிழிலும் 36 வயதினிலே படத்தை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மலையாளம், தமிழை தாண்டி பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கின்றார். இவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சாகித் கபூர் ஹீரோவாக நடிக்கின்றார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரோஷன் ஆண்ட்ருஸ் வெளியிட்டு இருக்கின்றார். இத்திரை படத்தை பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கின்றார். மேலும் படபிடிப்பு வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி (நாளை) தொடங்குகின்றது.