Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு”.. சேலம் இளைஞர்கள் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்புச் சட்டம்…!!!!

வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் மற்றும் கபிலன் உள்ளிட்டோர் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள்.

Young People Watching YouTube And Shooting. Startling Information At Trial.  One More Person Was Arrested | யூடியூப் பார்த்து துப்பாக்கி செய்த இளைஞர்கள்...  விசாரணையில் திடுக்கிடும் ...

இந்நிலையில் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். தற்போது சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி சிறையில் இருக்கின்றார்கள். கபிலன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருப்பதால் அவரை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றார்கள். மேலும் இந்த கும்பலுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |