ஹன்சிகா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் ஆரம்பமானது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா.
தற்போது ஹன்சிகா ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்கின்றார். இந்த படம் மூலம் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் காமெடிதிரில்லர் திரைப்படமாக உருவாகின்றது. அண்மையில் இத்திரைப்படத்தின் பூஜை படப்பிடிப்புடன் ஆரம்பமானது. இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு மூன்று மாதங்களில் நிறைவு பெறும் என படக்குழு கூறியுள்ளது. இந்த நிலையில் ஹன்சிகா மற்றும் இயக்குனர் ஆர்.கண்ணன் காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார்கள். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.