Categories
மாவட்ட செய்திகள்

122 வருடங்களில் இல்லாத மழை….. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சீர்காழி…!!!!

சீர்காழியில் 122 வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கின்றது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி முன்னுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது.

இரவு 9 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்த மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது. இதனால் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.

Categories

Tech |