Categories
சினிமா தமிழ் சினிமா

“யசோதா” கொண்டாட்டம்… சமந்தா வீட்டுக்கே சென்ற படக்குழு…!!!!!

சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள யசோதா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் கைவசம் தற்போது ஏராளமான படங்கள் இருக்கிறது. இவர் நடிப்பில் ஹரி, ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”யசோதா”.

இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது. எம். சுகுமார் ஒலிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியானதில் இருந்து நல்ல வரவேற்பு பெற்று பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இதனை கொண்டாடும் விதமாக இயக்குனர்கள் தங்கள் குழுவினர் சிலருடன் சமந்தாவின் வீட்டிற்கு சென்று இத்தகவலை கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த படத்திற்காக சமந்தா பலவிதமான கடின உழைப்பை கொடுத்திருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |