Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட 27 பவுன் நகை”…. போலீசார் மீட்பு…!!!!!

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் ஏற்கனவே 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டதில் அல்லிக்குட்டை பகுதியில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதியில் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். இதன் பின் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகைகளை மீட்டார்கள். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |