Categories
சினிமா தமிழ் சினிமா

“பச்சன் என்பது ஜாதி பெயரா….?” பெயருக்கு விளக்கமளித்த அமிதாப்…!!!!

அமிதாப் பச்சன் தனது பெயருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் தற்போது ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற கோன் பனேகா குரோர்பதி 14வது சீசனை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளரிடம் அமிதாப்பச்சன் பேசும்போது உங்கள் பெயரின் பின்னால் துணைப் பெயர் எதுவும் இல்லையே, ஏன் என கேட்டார். அதற்கு அந்தப் பெண் துணை பெயர் வைத்துக் கொள்ளும் போது நமக்கு ஜாதி ரீதியாக ஒரு அடையாளத்தை கொடுக்கின்றது.

நம்முடைய முதல் பெயரே நம்முடைய தனித்தன்மையை கூறுவதாக இருக்க வேண்டும். இதனால் நான் துணை பெயரை சேர்க்கவில்லை என கூறினார். இதன் பின் அமிதாபச்சன் தனது பெயருக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, தனது பெயருக்கு பின்னால் வருகின்ற பச்சன் என்ற துணை பெயர் ஜாதி பெயரோ அல்லது ஒரு சமூக பிரிவோ கிடையாது. அது எனது தந்தையின் செல்லப் பெயர். என்னை பள்ளியில் சேர்க்கும்போது எனது தந்தையிடம் ஆசிரியர் என் பெயருக்கு பின்னால் துணை பெயர் எதுவும் இல்லையா எனக் கேட்டார்கள். அதற்கு எனது தந்தை “பச்சன்” என சேர்த்துக் கொள்ளுங்கள் என கூறிய பின்னரே அமிதாப் பச்சன் என என் பெயர் மாறியதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |