Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யிடம் வாழ்த்து பெற்ற பின்பே இதை நான் செய்தேன்”…. உதயநிதி ஓபன் டாக்…!!!!

விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு உதயநிதி பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். சில மாதங்களுக்கு முன்பாக இவர் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதை அடுத்து வருகின்ற 18ஆம் தேதி கழகத் தலைவன் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பேட்டியில் பங்கேற்றபோது உதயநிதியிடம் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் குருவி படத்தில் இருந்து விஜய் குறித்த உறவை பேசினார். இதன்பின், தேர்தல் பிரச்சாரத்திற்கு முன் விஜய் என்னை அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். நான் அவர் வீட்டிற்குச் சென்று வாழ்த்துக்களை பெற்ற பிறகே பிரச்சாரத்திற்கு சென்றேன் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |