Categories
சினிமா தமிழ் சினிமா

போடு மாஸ்..! வாரிசு இசை வெளியீட்டு விழா எப்ப தெரியுமா…? வெளியான சூப்பர் நியூஸ்…!!!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.

இத்திரைப்படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலில் லிரிக் வீடியோ அண்மையில் வெளியானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. அதன்படி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கின்றார்கள். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |