Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரம் : காதல் மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவரின் வெறிச்செயல்…. என்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்…!!!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால். இவர் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றிய வருகின்றார். இவரின் மனைவி பிரியங்கா பாட்னா. இவர் போரூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் சென்ற 10 வருடங்களாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் தற்போது சென்னையில் உள்ள மண்ணடியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து வருடங்களாக வசித்து வந்தனர்.

இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. பிரியங்கா தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் பழகி வந்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் அவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்திருக்கின்றார். இதனால் ஆசிப் இக்பாலுக்கு அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. அந்த நபருடன் பழகுவதையும் செல்போனில் வெகு நேரம் பேசுவதையும் கண்டித்திருக்கிறார்.

ஆனால் பிரியங்கா தொடர்ந்து அந்த நபருடன் பழகி வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதுபோல நேற்று முன்தினம் மதியமும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதனால் சண்டை போட்டுக்கொண்டு பிரியங்கா வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறி தனது துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த ஆசிப் இக்பால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மனைவி கழுத்தை அறுத்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் அவர் அலறியதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த கதவை தட்டி உள்ளார்கள். ஆனால் பிரியங்கா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதன் பின் ஆசிப் இக்பால் வீட்டிலிருந்து ரத்தக் கரையுடன் வெளியே வந்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரியங்கா உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஆசிப் இக்பாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |