தர்ஷா குப்தா குறித்து பேசியதற்கு கண்டனம் வலுத்த நிலையில் சதீஷ் விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தற்போது ரிலீசாக உள்ள இந்த படத்தின் விழா சில நாட்களுக்கு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசும்போது, மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடை சேலையில் வந்துள்ளார். கோவை பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடை அணிந்து வந்திருக்கிறார் பாருங்கள் என பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் அதற்கு சதீஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் என் அருகில் தான் தர்ஷா குப்தா அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் என்னை பாருங்க, சன்னி லியோன் போல மாடலாக டிரஸ் அணிந்து வந்திருக்கின்றேன். சன்னி லியோன் எப்படி வருவார் என பார்ப்போம் எனக் கூறினார். ஆனால் சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்திருந்தார். அவரைப் பார்த்த தர்ஷா அப்செட் ஆனதாக என்கிட்ட சொன்னாங்க. மேலும் இதை என்னை மேடையிலும் சொல்ல சொன்னாங்க.
அதனாலதான் நான் மேடையில் அப்படி பேசினேன். ஆனா இதற்கு சில பேர் பெண்கள் உடை அணிவது அவர்களின் உரிமை என கூறுகின்றார்கள். அது உண்மைதான். பெண்களோ ஆண்களோ உடை உடுத்துவது அவர்களின் சுதந்திரம் தான். ஆனால் இது இரு நண்பர்கள் இடையே ஜாலியான பேச்சு.
தர்ஷா சொல்ல சொன்னதால தான், அவங்க சம்மதத்துடன் மேடையில் சொன்னேன். ஆனா இதை சில பேர் சீரியஸாக எடுத்துக்கொண்டு பேசுகின்றார்கள். இதை நான் ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கின்றேன். நான் நிறைய நல்ல கருத்துக்களை கூறியிருக்கின்றேன். இந்த விஷயத்திற்கு ரியாக்ட் செய்தது போல அந்த நல்ல கருத்துக்கும் ரியாக் செய்தால் நன்றாக இருக்கும் என கூறி இருக்கின்றார்.