பாடகி ராஜலட்சுமி தற்போது நடிகையாக களமிறங்குகின்றார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இது மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பல கலைஞர்கள் சினிமாவில் சாதித்து வருகின்றார்கள். அந்த வகையில் கிராமிய பாடல்களை மட்டுமே பாடுவோம் எனக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.
இருவரும் சினிமாவிலும் பல பாடல்களை பாடி இருக்கின்றார்கள். அதில் ராஜா லட்சுமி குரலில் வெளியான என்ன மச்சான், சாமி சாமி பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ராஜலட்சுமி சினிமாவில் நடிகையாக களமிறங்கி இருக்கின்றார். நார்மல் ஃபிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் தயாரிக்கும் திரைப்படம் லைசென்ஸ். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜலட்சுமி நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் ராதாரவி, அறிமுக நடிகர் விஜய் பாரத், மதுரை ரிஷி, அதிதி பாலமுருகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.