வானரமுட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புத்தூரில் இருக்கும் வானரமுட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இம்முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார்.
இதன் பின் டாக்டர் சுகஸ்ரீ குணசேகரன் பங்கேற்று இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகளை கூறினார். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றார்கள்..