Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் சீட்ல யாருமே உட்கார மாட்டீங்க…. ரஞ்சிதமே பாடல் குறித்து தமன் நெகிழ்ச்சி பதிவு…!!!!!

ரஞ்சிதமே பாடல் குறித்து இசையமைப்பாளர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது.

இந்த பாடல் விஜய் மற்றும் மானசியின் குரலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. ஆனால் சிலர் இப்பாடல் காப்பியடிக்கப்பட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ரஞ்சிதமே பாடலின் மொத்த வீடியோவையும் இப்போதுதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்கார மாட்டீங்க. உங்களோட நானும் ஒரு ரசிகனா… விஜய் பின்னி பெடல் எடுத்து இருக்கின்றார் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |