Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சீரான மின் விநியோகம் கிடைக்க…. ஒரு கோடி மதிப்பில் மின்மாற்றி… தொடங்கி வைத்த முதல்வர்…!!!!!

சீரான மின் விநியோகம் கிடைப்பதற்காக 16 மெகாவாட் மின் மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீ மூலக்கரை துணை மின் நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் நிலைய மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் சீராக செய்வதற்காக 1.053 கோடி செலவில் 16 மெகாவாட் மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதை நேற்று முன்தினம் காணொளி காட்சி மூலமாக முதல்வர் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய மின்மாற்றியை இயக்கி வைத்து மரக்கன்றுகள் நட்டார். இந்த புதிய மின்மாற்றி மூலமாக ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 50 கிராமங்களுக்கு சீரான மின் விநியோகம் கிடைக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |