Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காலில் விழுந்து கெஞ்சியே எம்.எல்,ஏ…. அதிர்ச்சி அடைந்த பெண்கள்… சேலத்தில் பரபரப்பு…!!!!!

சேலத்தில் எம்எல்ஏ ஒருவர் டாஸ்மாக் கடை ஊழியர்களின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் சென்ற 7-ம் தேதி பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் போராட்டம் நடந்தது. இதற்கு அதிகாரிகள் ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக உறுதி அளித்தனர். தற்போது ஒரு மாதம் ஆகியும் கடை இன்னும் அகற்றப்படாததால் அப்பகுதி மக்கள் எம்எல்ஏவிடம் முற்றுகை இட்டார்கள்.

இதையடுத்து எம்எல்ஏ அருள் பெண்களுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று கடையை மூடுமாறு ஊழியர்களிடம் கையெடுத்து கும்பிட்டார். பின்னர் யாரும் எதிர்ப்பாராத வகையில் விற்பனையாளர் மற்றும் ஊழியர்களை பார்த்து உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் எனக் கூறி தரையில் விழுந்த கும்பிட்டு கடையை மூடும்படி கெஞ்சினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் அவரை தூக்கி விட்டார்கள்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அருள், முத்துநாயக்கன்பட்டி சாமி சிலைகள் செய்வதற்கு  பிரச்சித்தி பெற்ற இடம் இருக்கின்றது. இந்த இடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு சென்ற ஒரு மாதத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. அதிகாரிகளும் அகற்றுவதாக எழுதிக் கொடுத்தார்கள். ஆனால் இதுவரை அகற்றவில்லை. இதனால் டாஸ்மாக் விற்பனையாளர் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தேன். டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டத்தை தொடர்வதாகவும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து சட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் உறுதி அளித்தார்.

Categories

Tech |