கோவையில் சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.
பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சித்ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி கோவையில் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியானது கோவை மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி மூன்று மணி நேரம் நடைபெற இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம் உடன் அவரின் இசைக்குழுவும் பங்கேற்க இருக்கின்றார்கள். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீ ராம் உரையாடலும் நடைபெறும்.
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் PAYTM INSIDER, BOOK MY SHOW, VMR GROBUX, ROTARY GALAXY சங்கத்திலும் கிடைக்கும். மேலும் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் கொடிசியா வளாகத்திலும் நேரடியாக சென்று டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.