இயேசுவின் சொரூபத்தில் இருந்து எண்ணெய் வடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் அருகே இருக்கும் கீழ்பாரத் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரெஜினா இம்மானுவேல் என்பவரின் வீட்டில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சொரூபம் வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சொரூபத்தில் இருந்து திடீரென எண்ணெய் வடிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரின் வீட்டிற்கு சென்று ஏசுவின் சொரூபத்தை பார்த்தார்கள். இது குறித்து ரெஜினாவின் மகள் கூறியுள்ளதாவது, நாங்கள் இயேசுநாதரின் சிலுவையை சென்ற ஐந்து வருடங்களாக வீட்டில் வைத்திருக்கின்றோம்.
இந்த சொரூபத்திற்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்வோம். இந்த நிலையில் திடீரென இயேசு சொரூபத்தில் இருந்து எண்ணை வடிந்தது. இது குறித்து தகவல் அறிந்த மக்கள் எனது வீட்டிற்கு வந்து இந்த காட்சியை பார்த்து செல்கின்றார்கள் எனக் கூறியுள்ளார்.