Categories
அரசியல்

“திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை”…. உலக நாயகனின் வாழ்க்கை பயணம் ஓர் அலசல்…!!!!!!

குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என பல இந்திய விருதுகளை பெற்றிருக்கின்றார். நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் கமல்.

மேலும் இவர் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார். இவர் 1960 ஆம் வருடம் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தனது ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஜனாதிபதியின் கையால் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார். கமல் குழந்தை நட்சத்திரமாக ஆறு திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இதன்பிறகு மலையாளத் திரைப்படத்தில் ( கன்னியாகுமரி முதல்) கதாநாயகனாக அறிமுகமாகி அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின் தசவதாரத்தில் உலகநாயகன் என்ற பெயரை பெற்று இன்று வரையிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்கம், இந்தி என ஆறு மொழிகளில் 228 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததற்காக தமிழுக்கான முதல் பிலிம் பேர் விருது பெற்றார். இதன் பிறகு பாலு மகேந்திரா இயக்கத்தில் 1983 ஆம் வருடத்தில் மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்திய தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு நாயகன் திரைப்படத்திலும் இந்தியன் திரைப்படத்திலும் நடித்ததற்காக மேலும் இரண்டு இந்திய தேசிய விருதுகள் கிடைத்தது.  1979 ஆம் வருடம் இவருக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 1990 இல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதும் 2014-ல் பத்மபூஷன் விருதும் வழங்கி கௌரவித்தது. இதன் பிறகு 2016 இல் செவாலியே விருது வழங்கப்பட்டது.

கமல்ஹாசன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 1954 ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பரமக்குடியிலேயே படித்தார். இதன் பின் திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். இதையடுத்து எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இதன்பிறகு அவரால் படிப்பை தொடர முடியவில்லை. இதற்கு காரணம் அவர் சிறுவயதில் இருந்து படிப்பை விட கலையின் மீதுதான் அதீத ஆர்வத்தை கொண்டிருந்தார்.

இதனால் அவர் டி.கே.எஸ் என்ற நடன குழுவில் சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி பின்னர் திரைத்துறையில் நடன அமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து பணியாற்றினார். அப்போது எம்.சரவணன் சிபாரிசின் பேரில் ஏவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் அவர் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் நடித்தார்.

இவர் சமூக வலைதளங்களில் அரசியல் குறித்து விமர்சித்து வந்த நிலையில் தான் கட்சி தொடங்கப் போவதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் பிறகு அரசியல் கட்சித் தலைவர்களை பலரையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். தனது அரசியல் கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தை சென்ற 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் மதுரையில் நடத்தினார். அந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் சட்டமன்ற அமைச்சர் சோமநாத் பாரதி, விவசாய தங்க தலைவர் பாண்டியன் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது கட்சி பெயரான மக்கள் நீதி மய்யம் பெயரை தெரிவித்தார்.

சிலர் என்னிடம் வலதா? இடதா? என கேட்கின்றார்கள். இது மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி. இதனால் எந்த பக்கமும் சாய்ந்து விட மாட்டோம். அதற்காகத்தான் கட்சிக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறோம் என்ற விளக்கத்தையும் கூறினார் கமல்.

கட்சி தொடங்கிய ஒரு வருடத்திலேயே 2019 ஆம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து அதிரடியாக களம் இறங்கினார். தனது முதல் தேர்தலிலேயே 3.7 சதவீத வாக்குகளை பெற்றார். இதன் பிறகு நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் தனக்கான வாக்கு வாங்கியே தக்க வைத்தது. 2021 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலிலும் முதன்முறையாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |