Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு மேதை நம்முடன் இருக்கும் போதே அவரை சந்தோஷப்படுத்த வேண்டும்”…. நன்றி தெரிவித்த ஜெயம் ரவி….!!!!!

பொன்னியின் செல்வன் வெற்றி விழாவில் மணிரத்தினத்தை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என ஜெயம் ரவி கூறியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற செப் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டுமே மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருக்கின்றது. இதனால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி விழாவை பட குழுவினர் கொண்டாடினார்கள். அப்போது நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பார்த்திபன் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி கூறியுள்ளதாவது, இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துவிட்டு ஒரு மனிதர் மிக அமைதியாக இங்கே அமர்ந்திருக்கின்றார். அவரை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். தற்போது இயக்குனர் பாலச்சந்தர் நம்மிடையே இல்லை. இருப்பினும் அவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டு தான் இருக்கின்றோம். இப்படி ஒரு மேதை நம்முடன் இருக்கும் போதே அவரை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும். இவர் 40 வருடங்களாக நம்மை அவரின் படங்கள் மூலம் சந்தோஷப்படுத்தி வருகின்றார். இவருக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும். அது என்னவென்று தெரியவில்லை. இந்தப் படைப்பை உருவாக்கியதற்காக அனைவரின் சார்பிலும் இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Categories

Tech |