மகாலட்சுமி செய்த செயலை ரவீந்தர் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி செய்த விஷயத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டு இருக்கின்றார். அதில் முட்டையை வேக வைத்த மகாலட்சுமி அடுப்பை நிறுத்தாமல் விட்டுயிருக்கின்றார். இதனால் தண்ணீர் வற்றி முட்டை கருவும் அளவிற்கு சென்று இருக்கின்றது.