மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் அலிக்கு அரசின் நிவாரணத் தொகை ரூபாய் 5000, வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்கள்.