நீர்நிலைகளை பாலக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு குள பாசன குளங்களில் ஒன்றான உடுமலை பெரியகுளம் தற்போது பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கின்றது. இதனால் நீர்த்தேக்க பரப்பு குறைவதோடு பாசனத்திற்கு நீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. குளத்தினுடைய கரைகள் உரிய பராமரிப்பு இல்லாமலும் புதர் மண்டி கிடைப்பதாலும் கரைகள் சேதம் அடையும் அபாயமும் இருக்கின்றது. இதன் காரணமாக நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு பெருமளவு நீர் வீணாகின்றது.
மேலும் இறைச்சி கழிவுகளால் தண்ணீர் பாலாகுவதுடன் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் நிலவுகின்றது. ஆகையால் இதுபோன்று நீர்நிலைகளை பாழாக்குபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு கோழி, மீன், இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது நீர் நிலைகளில் வீசுபவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியதோடு நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருக்கின்றார்கள்.