Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காசோலை மோசடி வழக்கு”…. தொழிலாளிக்கு 6 மாத சிறை தண்டனை… கோவில்பட்டி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

காசோலை மோசடி செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் தேவர் தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 2002 ஆம் வருடம் மார்ச் மாதம் 4-ம் தேதி கோவில்பட்டியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வாகனம் வாங்குவதற்காக 2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி இருக்கின்றார். இந்த நிலையில் கடனை வட்டியுடன் செலுத்துவதற்காக சென்ற 2006 ஜூன் மாதம் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையை நிதி நிறுவனத்திடம் கொடுத்திருக்கின்றார்.

இதனால் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை எடுக்க முயற்சித்ததில் அந்த காசோலை கணக்கில் போதுமான நிதி இல்லை என தெரிந்தது. இதனால் நிதி நிறுவன தலைமை நிர்வாக மேலாளர் பாலசுப்பிரமணி கோவில்பட்டி விரைவு நீதிமன்றத்தில் சங்கர் மீது மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கானது விசாரணை செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் நீதிபதி, சங்கருக்கு 6 மாத சிறை தண்டனையும் 1 மாதத்திற்குள் நிறுவனத்திற்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தாமல் விட்டால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |