பத்தாம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
பின் இது குறித்து மாணவியின் தாயார், மகளிடம் கேட்டபோது அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதை அடுத்து மாணவியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சிறுமி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இவர் தற்போது தனது தாயார் விஜயா மற்றும் அக்காள் லலிதா உள்ளிட்டோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் வெங்கடேசன் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றான். இதற்கு வெங்கடேசனின் தாயாரும் சகோதரியும் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள். மேலும் லலிதா தனக்குத் தெரிந்த மூன்று ஆண்களையும் வீட்டிற்கு வரவழைத்து மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி இருக்கின்றார்.
மேலும் அவர்களிடம் இருந்து 3500 பணத்தை பெற்று இருக்கின்றார் லலிதா. நான்கு பேர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமானது தெரியவந்தது. இந்த நிலையில் போலீசார் வெங்கடேசன், சகோதரி லலிதா, தாயார் விஜயா மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த வேங்கப்பன் உள்ளிட்ட நான்கு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள்.