Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் வியாபாரி அடித்துக் கொலை”…. 4 பேர் கைது…. போலீசார் குவிப்பு…!!!!

பால் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் திலீபன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். பலத்த காயமடைந்த முரளியை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திலீபன் மற்றும் அவரது நண்பர்களான நவீன், தீபன், ஆறுமுகம் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |