Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் வாத்தி…. “முதல் பாடலின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி பிரகாஷ்”…!!!!!

தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.  தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இந்த பாடலை தனுஷ் எழுதியிருப்பதாகவும் காதல் பாடலாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றார். இத்திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |